உங்கள் நல்வரவை எதிர்ப்பார்த்து தூவிய அன்பு மலர்கள்...

உங்கள் நல்வரவை எதிர்ப்பார்த்து தூவிய அன்பு மலர்கள்...

தாயுமானவர்...










   

 


அப்பா...
இந்த வார்த்தையில்தான் எத்தனை
உணர்வுகள்...
அத்தனை உறவுகளுக்கும்
வித்திட்ட சொல்...
தனிமையிலும் தன்னம்பிக்கை
மந்திர சொல்...

பத்துமாதம் கருவில்தாய்
சுமக்க…
மீதி மொத்தமாக உறவில்
சுமந்தவரே…
இன்று நதியில்
கலந்திட்டு…
கண்களை  குளமாக்கி
சென்றீரே...

 உறவான செல்வங்களை
உயர்திட்ட
ஆலமர விழுதுகள்
நீங்கள்...
இன்று சரணாலயம் 
இழந்த
வேடந்தாங்கல் பறவைகள்
நாங்கள்...


உங்கள் கனவுகளை
அர்ப்பணித்து...
எங்கள் கனவுகளுக்கு
வித்திட்டு...
இடர்களை இறக்கி
வாழ்வை தொடர 
வழிகூறாமல் எங்கு
சென்றீரோ... 


உங்கள் விரல் பிடித்து
ஊர்வலம் புரிய
ஆசை...
உங்கள் பாதங்களை மயிலிறகாள்
வருடிட ஆசை...
இன்று நீங்கள்
இங்கில்லையானதும் கனக்கிறதே
என் இதயம்...

ஊருக்காக வாழ்ந்தோர்
சிலர்…
உறவுக்காக வாழ்ந்தோர்
பலர்…
நல் உள்ளங்களுக்காக வாழ்ந்த
எம் தந்தையே...
எவர்க்கு உய்யும் இனிஉங்கள்
தோழமை...?

எங்கள் வீட்டு வெண்ணிலவாம்
நீங்கள்...
இன்று சூரியோதயத்தில்
உறங்கிவிட்டீரோ...?
அஃனி குஞ்சில்
கலந்துவிட்டீரோ...?
உங்கள் பிறிவு ஆற்றாமை
துடைத்தொழிக்க வருவீரா...?

எண்ணத்தில் நின்று
நெஞ்சத்தில் நிலைத்து
வண்ண மலர்  பூங்காவாய்
வாசம் சொறிந்து…
கண்ணிமைக்கும் நேரத்தில்
காலனுடன் கலந்திட்டீரே…
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
தந்தையாக வருவீரா...?

உண்டென்பார் சிலர்
இல்லையென்பார்....
எனக்கில்லை கடவுள் ஜாதி
மதபேதம்...
உங்கள் பகுத்தறிவு
போதனைகள்...
இன்றும் எங்கள் சிந்தனைகளில்
நதிப்பிரவாகம்...

எங்கள் வெற்றிக்கு
முன்நின்று...
தோல்விக்கு தோள் கொடுத்த
உற்ற தந்தையே...
நீங்கள் அரவணைப்பில்
என்றும் எங்கள்
தாயுமானவர்...
 
 
 
 

 

0 comments: